About Me

All variant Dry fish in the site...😉

கருவாடு யாருக்கு தான் பிடிக்காது. சிலருக்கு கருவாடு வாசனை தான் பிடிக்காதே தவிர, சமைத்த பிறகு ஒருப்பிடி பிடிக்காமல் விட மாட்டார்கள்.

கருவாடு பலருக்கு சரியாக சமைக்க தெரியாது. அதனால், சுவை சரியாக வராது. எல்லா வகை கருவாடும் உடலுக்கு நல்ல தான்.

அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு மீன் மற்றும் கருவாடு தான். ஆனால், கருவாட்டை எந்தெந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது, யாரெல்லாம் சாப்பிடக் கூடாது என உங்களுக்கு தெரியுமா?

#1

  • கருவாடு மட்டுமின்றி மீன், நண்டு போன்ற உணவுகள் சாப்பிடும் போதும், மோர், தயிர், கீரை போன்ற உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது. இது புட் பாய்சன் ஆக காரணமாகலாம்.

#2

  • மிளகு, பூண்டு, சீரகம், திப்பிலி போன்றவை சேர்த்து ரசம் வைத்து கருவாட்டுடன் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. மேலும் இந்த ரசத்தை தனியாக குடித்து வந்தால் அஜீரணம், வாந்தி, பேதி ஆகாமல் தடுக்கும்.

#3

  • தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது கருவாடு, மீன், நண்டு, இறால், தயிர், மோர் போன்ற உணவுகள் சாப்பிட கூடாது.

#4

  • சைனஸ், மூக்கடைப்பு, சளி, இருமல், தும்மை, காய்ச்சல், ஆஸ்துமா போன்ற கோளாறு உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கவே கூடாது.

#5

  • இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உப்பு அதிகமான உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது, ஆகையால் அவர்க கருவாடு அதிகம் உண்ணுதல் கூடாது.

கருவாடு மட்டுமின்றி அப்பளம் மற்றும் ஊறுகாயும் கூட இவர்களுக்கு தடை செய்யப்பட்ட உணவுகள் தான்.

#6

  • மேலும், மீன், கருவாடு சாப்பிட்ட பிறகு பால், தயிர் சாப்பிடக்கூடாது. மீறி உண்டால் "வெண் மேகம்" போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது.

Reviews

2 Reviews

SARAN Saran

20 February 2022

20 February

2022

Send a Message

An email will be sent to the owner

Areas Covered

Ramanathapuram